Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புகையிரத திணைக்களத்தின் பொறுப்பற்ற நடவடிக்கைகளே விபத்துக்களுக்கு காரணம்: சத்தியலிங்கம்

In இலங்கை
Updated: 09:34 GMT, May 17, 2017 | Published: 09:34 GMT, May 17, 2017 |
0 Comments
1213
This post was written by : Ravivarman

இலங்கை புகையிரதத் திணைக்களத்தின் பொறுப்பற்ற நடவடிக்கைகளே அண்மைக்காலமாக விபத்துக்கள் நடைபெறுவதற்கு காரணமென வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் குற்றஞ் சுமத்தியுள்ளார்.

வவுனியா புளியங்குளத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற புகையிரத விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலியாகிமை தொடர்பில், இன்றையதினம் (புதன்கிழமை) ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“புகையிரத திணைக்களமானது பொறுப்பற்ற விதத்தில் தனது பணிகளை அண்மைக்காலங்களில் முன்னெடுத்து வருகின்றது. இதற்கு சிறந்த உதாரணம் ஓமந்தை விளாத்திக்குளம் புகையிரதக் கடவையை மூடியமையாகும். அத்துடன் வவுனியாவில் காணப்படும் பல கடவைகள் முறையாக நிர்மாணிக்கப்படவில்லை.

தண்டவாளம் தரைமட்டத்திற்கு மேலாக வெளிக்கிளம்பிய நிலையில் காணப்படுவதால் பாதையைக் கடக்கும் வாகனங்கள் பாரிய சிரமத்தை எதிர்நோக்குகின்றன. புதூர் புளியங்குளம் வீதிக் கடவையில் காப்பாளர் அற்ற மின்சமிக்ஞை விளக்கு மட்டுமே காணப்படுவதால் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.

எனவே இந்த விடயத்தில் புகையிரத திணைக்களம் கூடிய கவனமெடுத்து எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் பாரத்துக்கொள்ள வேண்டும்” என அமைச்சர் ப.சத்தியலிங்கம் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg