Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பார்வையற்றவராக நடிக்கும் தன்ஷிகா

In சினிமா
Updated: 12:29 GMT, May 17, 2017 | Published: 12:29 GMT, May 17, 2017 |
0 Comments
1442
This post was written by : Shailu

‘கபாலி’ படத்தில் ரஜினியின் மகளாக நடித்துள்ள தன்ஷிகாவின் நடிப்பிற்கு இரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து தன்ஷிகா தற்போது மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்து வருகிறார்.

விக்ரம் நடிப்பில் தமிழ் மற்றும் ஹிந்தியில் வெளியான ‘டேவிட்’ படத்தை இயக்கிய பிஜாபல் நம்பியார் தற்போது மலையாளத்தில் இயக்கும் புதிய படம் ‘சோலோ’.

இப்படத்தில் நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்துள்ள நிலையில், அவருடைய ஜோடியாக தன்ஷிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தன்ஷிகா நடிக்கும் முதல் மலையாள படம் இதுவாகும். இப்படத்தில் அவர் பார்வையற்ற நடன மங்கையாக நடிக்கவிருக்கிறார்.

இது தவிர தன்ஷிகா நடிப்பில் சமுத்திரகனி இயக்கும் ‘கிட்ணா’ படம் மலையாளத்திலும் வெளியாகவுள்ள நிலையில், அவர் கன்னடத்தில் ‘உத்கர்ஷா’ படத்திலும் நடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg