Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழ்ப்பாணத்தில் ஆசிரியை படுகொலை

In இலங்கை
Updated: 13:37 GMT, May 17, 2017 | Published: 13:37 GMT, May 17, 2017 |
0 Comments
1281
This post was written by : Vithushagan

வீட்டில் தனியாக இருந்த  வயோதிபப் பெண்மணி கொலை செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுப்பிட்டி மத்தி பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவில் இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அச்சுவேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றி ஓய்வு பெற்ற 68 வயதுடைய சுப்பிரமணியம் தேவி சரஸ்வதி வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையிலேயே தாக்குதலுக்கு இலக்காகி கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு வேளையில் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் தலையில் தாக்கியதுடன், குறித்த ஓய்வு பெற்ற ஆசிரியரை  சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளனர்.

தலையில் தாக்கப்பட்ட நிலையில், வீட்டு வேலைக்காக வந்த நபர் பார்த்து அயலவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளதுடன், அச்சுவேலி பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளார்.

மல்லாகம் நீதிமன்ற நீதிபதி சடலத்தினைப் பார்வையிட்ட பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக  யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது ,கொலை குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் அச்சுவேலிப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg