Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிஷோர் நடிப்பில் 4​5 நிமிட படமாக உருவாகும் “கல்கி”

In சினிமா
Updated: 16:31 GMT, May 17, 2017 | Published: 16:30 GMT, May 17, 2017 |
0 Comments
1370
This post was written by : S.K.Guna

நடிகர் கிஷோர் நல்ல கதை அம்சமுள்ள படங்களில் நடிப்பதன் மூலம் நடிப்பு பசிக்கு நிரந்தரமாக தீனி போட்டுக் கொண்டு இருப்பவர்.

தற்போது கிஷோர் நடிப்பில் ‘ கல்கி ‘ என்ற 45 நிமிட படம் உருவாகிவருகின்றது. சர்வதேச அளவில் பெரும் பெயர் ஈட்டி தரப்பு போகும் படம் என்று இதனை திரையுலக வல்லுநர்கள் கூறுகின்றனர். Pramodh பிலிம்ஸ் என்னும் புதிய படநிறுவனத்தின் சார்பில் ஸ்ருதி தயாரிக்கும் இந்த படத்தில் கிஷோருக்கு இணையாக நடிப்பவர் யாஸ்மின்.

புதிய இயக்குனர் திலீப் இயக்க , பிரபல பத்திரிகையாளர் பரத்வாஜ் ரங்கன் திரைக் கதை அமைத்து வசனம் இயற்ற, விஜய் கார்த்திக் கண்ணன்  ஒளிப்பதிவு செய்ய , ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்ய , கிரிஷ் இசை அமைக்கிறார்.

‘இந்தப் படத்தின் தலைப்பே கதை சொல்லும். கல்கி என்றால் அழிப்பவர் என்று அர்த்தம். கலை இயக்குநர் ரெம்போனின் பணி மிகவும் போற்றத்தக்கது. கிஷோரின் நடிப்பு அவருக்கு சர்வதேச அளவில் பெயர் வாங்கி கொடுக்கும்’ என்று தயாரிப்பாளர் சுருதி கூறினார்.
kalaki 1

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg