Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திறமை வாய்ந்த வீரர் என்பதை டோனி நிரூபித்துவிட்டார்: மனோஜ்திவாரி புகழாரம்

In கிாிக்கட்
Updated: 05:03 GMT, May 18, 2017 | Published: 05:03 GMT, May 18, 2017 |
0 Comments
1846
This post was written by : Anojkiyan

ஐ.பி.எல். தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான முதலாவது அரையிறுதி போட்டியில், அதிரடி காட்டியதன் மூலம் டோனி திறமை வாய்ந்த வீரர் என்பதை நிரூபித்துவிட்டார் என ரைசிங் புனே சுப்பர்ஜெயன்ட் அணியின் துடுப்பாட்ட வீரர் மனோஜ்திவாரி புகழாரம் சூட்டியுள்ளார்.

நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) நடந்த முதலாவது அரையிறுதி போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியை 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புனே அணி இறுதிபோட்டிக்குள் நுழைந்தது. இப்போட்டியின் பின் நிருபர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன் போது அவர் மேலும் கூறுகையில்,

“கடைசி 2 ஓவர்களில் துப்பாட்டத்தின் உத்வேகத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. 18வது ஓவர் வரை நாங்கள் தடுமாறினோம். டோனி சில அதிரடியான ஷொட்களை அடித்தார். பும்ரா பந்து வீச்சில் அதுபோன்று அடித்து துடுப்பெடுத்தாடுவது கடினமான காரியமாகும். ஆனால் தான் எவ்வளவு உயர்ந்த திறமை வாய்ந்த வீரர் என்பதை டோனி நிரூபித்தார்.

கடைசி கட்டத்தில் டோனி அடித்த சிக்சர்கள் அணியின் ஓட்ட எண்ணிக்கை உயர உதவிகரமாக இருந்தது. எங்களது பந்து வீச்சாளர்கள் திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தினார்கள். மும்பை அணி பவர்பிளேயில் சில விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணி அதில் இருந்து மீண்டு வராமல் பார்த்து கொண்டோம். ஒரு ஓவரில் 2 விக்கெட் உள்பட 3 விக்கெட்டுகளை வொஷிங்டன் சுந்தர் வீழ்த்தியது மும்பை அணியின் முயற்சியை முடக்கி விட்டது.

அணிக்கு நான் அளித்த பங்களிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் எனது நம்பிக்கை அதிகரித்து இருக்கிறது. அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் தனது பணியை நன்றாக செய்தார். இந்த வெற்றிக்கு ஒருவர் மட்டும் காரணம் சொல்ல முடியாது. அணியில் உள்ள எல்லோரும் தங்களது பங்களிப்பை சரியாக அளித்தனர். களத்தடுப்பாளர்களை எங்கு நிறுத்துவது என்பது உள்பட பல விடயங்களில் அணித்தலைவருக்கு டோனி உதவிகரமாக இருந்தார். வீரர்கள் சரியான இடத்தில் நின்று களத்தடுப்பு செய்ய டோனி ஆலோசனை வழங்கினார்” என கூறினார்.

இப்போட்டியில் டோனி 26 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடங்களாக 40 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg