Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்ற முடியாது: முதல்வரிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

In இலங்கை
Updated: 05:33 GMT, May 18, 2017 | Published: 05:33 GMT, May 18, 2017 |
0 Comments
1701
This post was written by : Risha

தேசிய பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டிய அவசியம் காணப்படுகின்ற நிலையில், வட. மாகாணத்திலிருந்து இராணுவத்தினரை முழுமையாக அகற்ற முடியாது என வடக்கு முதலமைச்சரிடம் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின்போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு முதல்வரின் கோரிக்கைக்கு அமைய நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது, காணி விடுவிப்பு, வேலைவாய்ப்பு மற்றும் மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதன்படி, காணாமல் போனோர் அலுவலகத்தை நடைமுறைப்படுத்தப்படாது இருப்பதற்கு சில சட்ட திருத்தங்களே காரணம் என்றும் அதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, காணி விடுவிப்பில் இராணுவத்தினருக்கு தேவையான காணிகள் தவிர்ந்து ஏனைய காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இராணுவம் வசமுள்ள நீர் நிலைகள் விரைவில் திரும்பக் கையளிக்கப்படும் எனவும் பாதுகாப்புச் செயலாளர் ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினையை தீர்க்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், பொலிஸ் சேவையிலும் ஆட்களை உள்ளீர்க்க முடியும் என்றும் அதற்காக மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கென அனைத்து அமைச்சுக்களையும் உள்ளடக்கியதாக நடமாடும் சேவையொன்றை வடக்கில் செயற்படுத்தி அனைத்து பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு காணப்படும் என்றும் ஜனாதிபதி உறுதிபூண்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg