Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அ.தி.மு.க.வினர் மக்களின் நலன் கருதி செயற்பட வேண்டும்: திருமாவளவன்

In இந்தியா
Updated: 06:16 GMT, May 18, 2017 | Published: 05:52 GMT, May 18, 2017 |
0 Comments
1274
This post was written by : Shailu
Thirumavalavan

அ.தி.மு.க.வினர் கட்சி மோதல்களை கைவிட்டு தமிழக மக்களின் நலன் கருதி செயற்பட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ‘அ.தி.மு.க.வில் உள்ளவர்கள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டவர்கள். எனவே அவர்கள் கட்சியை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

தமிழகத்தை ஆட்சி செய்யும் பலம் பொருந்திய மிகப்பெரிய கட்சியாக அ.தி.மு.க திகழ்கின்றது. ஆனால் அவர்களால் மக்களுக்கு எவ்வித பலனும் இல்லை.

தற்போதைய சூழ்நிலையில் இவர்கள் கட்சி மோதல்களிலேயே அதிக கவனம் செலுத்துகின்றார்களே தவிர மக்களின் நலன் குறித்து சிந்திப்பதில்லை’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg