Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படும்: மெக்சிகோ ஜனாதிபதி உறுதி

In உலகம்
Updated: 05:55 GMT, May 18, 2017 | Published: 05:55 GMT, May 18, 2017 |
0 Comments
1394
This post was written by : Elakkiya

மெக்சிகோவில் இடம்பெற்றுவரும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் குறித்த விசாரணைகளை வலுப்படுத்துவதாக மெக்சிகோ ஜனாதிபதி என்ரிக் பெனா நீட்டோ உறுதியளித்துள்ளார்.

இது குறித்து நேற்று (புதன்கிழமை) அறிவித்துள்ள ஜனாதிபதி பெனா நீட்டோ, ‘ ஊடகவியலாளர்களுக்கு உத்தரவாதம் வழங்க வேண்டியது மெக்சிகோவின் கடமையாகும். அதனால் அவர்கள் தமது பணிகளை தொடர முடியும். பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்களின் படுகொலைகள் பெரும்பாலும் ஒரு அறிகுறியாகும். இது அரசாங்க உத்தரவுடனான ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலம் முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படும் நாடுகளில் மெக்சிகோவும் ஒன்றாக விளங்குகின்றது. கடந்த மார்ச் மாதத்தின் பின்னர் ஐந்து ஊடகவியலாளர்கள் மெக்சிகோவில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமையும் ஜேவியர் வால்டேஸ் என்ற பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவ்வாறு மெக்சிகோவில் இடம்பெறும் ஊடகவியலாளர்களின் படுகொலைகள் நாடளாவிய ரீதியில் எதிர்ப்புக்களை தூண்டிவிட்டுள்ள நிலையில் அவற்றிற்கு பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதி மேற்படி கருத்தினை வெளியிட்டுள்ளார்.

இதன்போது, அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுத்துள்ள ஊடகவியலாளர்களுக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg