Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெள்ளவத்தை அனர்த்தம்: 20 பேர் காயம்- 10 பேரின் நிலை கவலைக்கிடம் (2ஆம் இணைப்பு)

In இலங்கை
Updated: 11:00 GMT, May 18, 2017 | Published: 05:54 GMT, May 18, 2017 |
0 Comments
2719
This post was written by : Risha

வெள்ளவத்தையில் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவந்த ஆறு மாடி திருமண மண்டப கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து ஏற்பட்ட அனர்த்தத்தில் 20 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், 10 போின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தொிவிக்கப்படுகிறது. மூன்று பேர்வரை காணாமல் போயுள்ளதாக தொிவிக்கப்படுகிறது.

வெள்ளவத்தை, சார்லிமண்ட் ஒழுங்கையில் அமைந்துள்ள எக்சலன்சி திருமண மண்டப கட்டடமே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது. மேற்படி கட்டடமானது தொடர்ந்து சாிந்து வருகின்ற நிலையில், பாதுகாப்பு கருதி அக்கட்டடத்தை அண்மித்த பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு வருவதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த பகுதியில் தீயணைப்பு படை வீரர்கள், இராணுவத்தினர் ஆகியோர் மீட்பு பணிகளை முன்னெடுத்து வருவதாக தொிவிக்கப்படுகிறது.

மேற்படி திருமண மண்டபத்தின் வாகன நிறுத்த பகுதியியே இடிந்து விழுந்துள்ளது. இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல வாகனங்கள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

wella1 wella

வெள்ளவத்தையில் கட்டடம் இடிந்து வீழ்ந்தது: 8 பேர் படுகாயம்

கொழும்பு- வெள்ளவத்தை பகுதியில் சற்று முன்னர் கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்துள்ளது.

அனர்த்தத்தில் எட்டு பேர் படுகாயமடைந்த நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

well

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg