Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹைதராபாத் அணிக்கு தக்க பதிலடி கொடுத்து வெளியேற்றி இருக்கிறோம்: கம்பீர் பெருமிதம்

In கிாிக்கட்
Updated: 08:20 GMT, May 18, 2017 | Published: 08:20 GMT, May 18, 2017 |
0 Comments
1628
This post was written by : Anojkiyan

கடந்த ஐ.பி.எல். போட்டியில் வெளியேற்று சுற்றில் பெற்ற தோல்விக்கு தற்போது தக்க பதிலடி கொடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வெளியேற்றி இருக்கிறோம் என கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தலைவர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற வெளியேற்று சுற்றில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இரண்டாவது அரையிறுதி போட்டிக்கு கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி தகுதி பெற்றது. இந்த போட்டியின் பின் நிருபர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“பந்து வீச்சாளர்களின் பணி மிகவும் சிறப்பாக இருந்தது. 128 ஓட்டங்களுக்குள் ஹைதராபாத்; அணியை கட்டுப்படுத்தியது அற்புதமானது. பந்துவீச்சாளர்களுக்குத்தான் பாராட்டு எல்லாம் சேரும். நம்ப முடியாத வகையில் மிகவும் அபாரமாக வீசினார்கள். இதனால் போட்டி எங்கள் பக்கம் கொண்டு வர முடிந்தது.

இந்த ஆடுகளத்தில் துடுப்பாட்டம் செய்வது சவாலாக இருந்தது. 160 ஓட்டங்கள் குவித்து இருந்தால் சிறந்த ஓட்ட எண்ணிக்கையாக இருந்து இருக்கும். சிறிய இலக்கில் 3 விக்கெட் போனது சிறிய ஏமாற்றம். ஆனாலும் பொறுப்புடன் விளையாடி இருக்கிறோம். கடந்த ஐ.பி.எல். போட்டியில் வெளியேற்று சுற்றில் நாங்கள் ஹைதராபாத் அணியிடம் தோற்றோம். இதற்கு தற்போது பதிலடி கொடுத்து வெளியேற்றி இருக்கிறோம். மும்பை இந்தியன்சுடன் இதே ஆடுகளத்தில் சந்திக்கிறோம். அந்த அணிக்கு எதிராக எங்களது சாதனைகள் சிறப்பாக இருந்தது இல்லை. ஆனாலும் மும்பைக்கு எதிராக நன்றாக விளையாடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg