Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ராஜிவ் காந்தி கொலை வழக்கு: முருகன் தாக்கல் செய்த மனு ஒத்திவைப்பு

In இந்தியா
Updated: 11:05 GMT, May 18, 2017 | Published: 08:56 GMT, May 18, 2017 |
0 Comments
1634
This post was written by : Shailu

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன் தன்னுடைய தாயை சந்திக்க அனுமதி கோரி தாக்கல் செய்துள்ள மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு கோடை விடுமுறைக்கால நீதிபதிகள் மகாதேவன் மற்றும் கோவிந்தராஜ் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு வழக்கறிஞர் கோவிந்தராஜ், மனுதாரர் முருகன் சமீபத்தில் சிறை சாலைக்குள் கையடக்க தொலைபேசி உபயோகித்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும், அதனால் அவரது தயாரை சந்திப்புக்கான அனுமதி அளிக்க முடியாது என்றும் தெவித்திருந்தார்.

இந்நிலையில், முருகன் தாக்கல் செய்துள்ள மனுவில், “கையடக்க தொலைபேசி கைப்பற்றப்பட்ட விவகாரத்தினால் வழக்கமாக சிறைக்குள் கைதிகளுக்கு வழங்கப்படும் நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்திக்கும் உரிமை  மூன்று மாதங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல தனிப்பிரிவில் அடைக்கப்பட்டுள்ள எனது மனைவி நளினியை 15 நாட்களுக்கு ஒரு முறை 30 நிமிடங்கள் சந்திக்கும் வாய்ப்பும் மறுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, கடந்த மாதம் 2-ஆம் திகதி இலங்கையில் இருந்து சென்னை விஜயம் செய்திருந்த எனது தாயார், என்னை சந்திக்க இருமுறை முயற்சித்த பொழுதும் அவருக்கான அனுமதியும் வழங்கப்படவில்லை.

எனது தாயாரின் விசா காலம் இம்மாத இறுதியில் காலாவதியாக உள்ளதால், அவரை சந்திப்பதற்கு திகதி ஒதுக்கி தரவேண்டும்” என அவர் தனது மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg