Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசாங்கத்திற்கு எதிராக கிரேக்க பொலிஸார் பணிநிறுத்த போராட்டம்

In ஐரோப்பா
Updated: 10:01 GMT, May 18, 2017 | Published: 10:01 GMT, May 18, 2017 |
0 Comments
1272
This post was written by : Elakkiya

அரசாங்க சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் கிரேக்க பொலிஸார் நேற்று (புதன்கிழமை) பணிநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அத்துடன்  கிரேக்க பொலிஸாருடன் இணைந்து  கடலோர பாதுகாப்பு படையினர் என நூற்றுக்கணக்கானோர் கிரேக்க தலைநகர் எதென்ஸில்  ஆர்ப்பாட்டத்திலும்  ஈடுபட்டனர்.

இதன்போது அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கையின் ஒருபகுதியாக தமது வருமான நலன்கள் குறைக்கப்படுவதற்கு எதிராக கோஷம் எழுப்பியவாறு சீருடையுடன் கறுப்பு நிற பலூன்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டகாரர்கள் அணிவகுத்து சென்றனர்.

இதன்போது கருத்து தெரிவித்த கிரேக்க பொலிஸ் சிறப்பு காவலர்கள் ஒன்றிய தலைவர், சமுதாயத்தில் பொது ஒழுங்கு அல்லது அமைதி மற்றும் பாதுகாப்பு என்பவை இனி இருக்காது என்பது தெளிவாகின்றது என குறிப்பிட்டுள்ளார். அதேவேளை மேற்படி சட்டமூலத்தை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கிரேக்க பொலிஸ் அதிகாரிகள் கூட்டமைப்பின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

கிரேக்க கடற்படை அதிகாரிகள் சங்க தலைவர் தெரிவிக்கையில், ‘அரசு அதிகாரிகளை முட்டாள்களாக்க முயற்சிக்கின்றது. அவர்கள் எங்களுடன் உரையாடியிருக்க வேண்டும். முக்கியமாக எங்களுடைய முயற்சிகளை அவர்கள் அங்கீகரிக்க வேண்டும். நாட்டையும் எல்லையையும் நாம் பாதுகாக்கின்றோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg