Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதி தலைமையில் இராணுவ வீரர்கள் நினைவு தினம்

In இலங்கை
Updated: 11:52 GMT, May 18, 2017 | Published: 10:19 GMT, May 18, 2017 |
0 Comments
1231
This post was written by : Vithushagan

தேசிய இராணுவ வீரர்கள் நினைவு தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை நாடாளுமன்ற மைதானத்தில் உள்ள இராணுவ வீரர்களின் நினைவு தூபிக்கு அருகில் இடம்பெறவுள்ளது.

தேசிய இராணுவ வீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் 7 மணி வரை சில பாதைகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளதுடன், சில வீதிகள் மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி பொல்துவ சந்தியில் இருந்து பெலவத்தை சந்தி வரையான நாடாளுமன்ற வீதி, கிம்புலாவல சந்தியிலிருந்து சுற்றுவட்டம் ஊடாக பாலந்துன சந்தி வரையான ஜப்பான் நட்புறவு வீதி, பாலந்துன சுற்றுவட்டத்திலிருந்து கியன் ஹேம் சுற்றுவட்டம் ஊடாக பொல்துவ சந்தி வரையான வீதி மற்றும் பெலவத்தை சந்தியிலிருந்து கியன் ஹேம் ஊடாக பொல்துவ சந்தி வரையான வீதிகளில் இந்த விஷேட போக்குவரத்து திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

இதன் காரணமாக நாளைய தினம் சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg