Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வர்த்தக விமானசேவையில் பணியாற்றிய நெதர்லாந்து மன்னர்

In ஐரோப்பா
Updated: 11:38 GMT, May 18, 2017 | Published: 11:36 GMT, May 18, 2017 |
0 Comments
1301
icon_com
This post was written by : Elakkiya
kim

நெதர்லாந்து மன்னர் வில்லெம் அலெக்சாண்டர் வர்த்தக விமானசேவை ஒன்றின் துணை விமானியாக பணியாற்றியதாக தனது  வாழ்க்கை இரகசியங்களை  வெளியிட்டுள்ளார்.

நெதர்லாந்தின் பத்திரிகை ஊடகமான  ‘டி டெலிகிராஃப்’ க்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின்போதே அவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார். இதன்போது  21 வருடங்களாக வர்த்தக விமானசேவை ஒன்றின் துணை விமானியாக மாதந்தோறும் இரண்டுமுறை பயணித்ததாக மன்னர் குறிப்பிட்டுள்ளார்.

நெதர்லாந்து ரோயல் குடும்பத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தின் பிரகாரம், மன்னர் அலெக்சாண்டர் கடந்த 1987 ஆம் ஆண்டு வர்த்தக சேவைக்கான விமானி அனுமதிப் பத்திரத்தினை பெற்றுக் கொண்டதாகவும் அதன்பின்னர் 2001 ஆம் ஆண்டு பயணிகள் விமான சேவைக்கான விமானி அனுமதிப் பத்திரத்தினையும் பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg