Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இறுதிபோட்டிக்குள் நுழையப்போகும் அணி எது? மும்பை-கொல்கத்தா பலப்பரீட்சை

In கிாிக்கட்
Updated: 04:30 GMT, May 19, 2017 | Published: 04:30 GMT, May 19, 2017 |
0 Comments
1808
This post was written by : Anojkiyan

ஐ.பி.எல் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இன்று (வெள்ளிக்கிழமை) பெங்களூரில் நடைபெறவுள்ள இப்போட்டியில் வெற்றிபெறும் அணி, இறுதிபோட்டியில் புனே அணியுடன் சம்பியன் பட்டத்துக்காக மோதும்.

இன்றைய போட்டியில், மும்பை அணிக்கு ரோஹித் சர்மாவும் கொல்கத்தா அணிக்கு கௌதம் கம்பீரும் தலைமைதாங்கவுள்ளனர்.

இரு அணிகளும் சம்பியன் அணிகள் என்பதால் இப்போட்டியின் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனாலும் இப்போட்டியில் வீரர்களின் திறமையை பொறுத்தே வெற்றிவாய்ப்பு அமையும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg