Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.சி.சியின் வருடாந்திர டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்தியா முதலிடம்

In கிாிக்கட்
Updated: 06:31 GMT, May 19, 2017 | Published: 06:31 GMT, May 19, 2017 |
0 Comments
1569
This post was written by : Anojkiyan

சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) ஒவ்வாரு வருடமும் மே மாதம் வெளியிடும் வருடாந்திர டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்தியா 1 புள்ளிகள் கூடுதலாக பெற்று 123 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

தென்னாபிரிக்கா அணி 8 புள்ளிகள் கூடுதலாக பெற்று 117 புள்ளிகளுடன் 2வது இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு முன் இந்தியா தென்னாபிரிக்கா இடையே 13 புள்ளிகள் இடைவெளி இருந்தது. தற்போது இது 6 புள்ளியாக குறைந்துள்ளது.

அவுஸ்ரேலிய 108 புள்ளியில் இருந்து 100 புள்ளிக்கு சரிந்து 3வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து இரண்டு புள்ளிகள் சரிந்து 99 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. 4 புள்ளிகள் சரிந்த பாகிஸ்தான் 93 புள்ளிகளுடன் 6வது இடத்திற்கு சரிந்துள்ளது. நியூசிலாந்து 97 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.

இலங்கை 91 புள்ளிகளுடன் 6வது இடத்திலும், மேற்கிந்திய தீவுகள் 75 புள்ளிகளுடன் 7வது இடத்திலும், பங்களாதேஷ் 69 புள்ளிகளுடன் 9வது இடத்திலும் உள்ளது. சிம்பாப்வே புள்ளிகள் ஏதும் பெறாமல் 10வது இடத்தில் உள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg