Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சம்பியன்ஸ் கிண்ண தொடரில் விளையாட தயாராகும் மார்கஸ் ஸ்டோனிஸ்

In கிாிக்கட்
Updated: 07:16 GMT, May 19, 2017 | Published: 07:16 GMT, May 19, 2017 |
0 Comments
1445
This post was written by : Anojkiyan

தோள்பட்டை காயம் குணமடைந்து உடல் தகுதியை எட்டி இருக்கும் அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான மார்கஸ் ஸ்டோனிஸ், எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள சம்பியன்ஸ் கிண்ண தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நடப்பு ஐ.பி.எல். தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த மார்கஸ் ஸ்டோனிஸ், இந்த போட்டி தொடரின் போது தோள்பட்டையில் காயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக நாடு திரும்பியிருந்தார்.

இந்நிலையில் அவரின் அவரின் காயம் குணமடைந்துள்ளதால் அவர் தற்போது பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார். இதனால் அவர் சம்பியன்ஸ் கிண்ண தொடரில் களமிறங்குவார் என நம்பப்படுகின்றது. இருப்பினும் இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg