Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மஹிந்த காலத்தைவிட நல்லாட்சியில் வன்முறைகள் அதிகரித்துள்ளன: ஹிஸ்புல்லாஹ்

In இலங்கை
Updated: 07:41 GMT, May 19, 2017 | Published: 07:41 GMT, May 19, 2017 |
0 Comments
1205
This post was written by : Risha
hisbulla

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஆட்சிகாலத்திலும் பார்க்க, முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகளைகளை ஒழிப்போம் என ஆட்சிபீடம் ஏறிய நல்லாட்சியின் ஆட்சியில் முஸ்லிம் சமூகம் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருவதாக மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

ஆரையம்பதி ஒல்லிக்குளம் பிரதேசத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற வீடுகள் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. முஸ்லிம்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. அதனாலேயே 95 சதவீத முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ஆட்சியையே மாற்றினார்கள். ஆனால் இன்று அதைவிட மிகமோசமாக முஸ்லிம் சமூகம் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

முஸ்லிம்கக்கெதிரான அடக்கு முறைகளைகளை ஒழிப்போம் என ஆட்சிபீடம் ஏறிய இந்த அரசாங்கம் அதனை இதுவரை நிறைவேற்றவில்லை. முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இந்த நிலைமை தொடர அனுமதிக்க முடியாது. இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவைச் சந்தித்து பேசவிருக்கிறேன் என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg