Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சர்வதேச வான்பரப்பில் அமெரிக்க விமானத்தை இடைமறித்த சீன போர் விமானங்கள்

In
Updated: 10:26 GMT, May 19, 2017 | Published: 10:24 GMT, May 19, 2017 |
0 Comments
1728
This post was written by : Elakkiya

கிழக்கு சீன கடற்பரப்பின் மீது சர்வதேச வான்பரப்பில் பறந்துகொண்டிருந்த அமெரிக்க விமானத்தை எவ்வித காரணமும் இன்றி சீன போர் ஜெட் விமானங்கள் இடைமறித்தாக அமெரிக்க இராணுவத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் சுகோய் சு-30 ரக போர் ஜெட் விமானங்கள் இரண்டு, அமெரிக்காவின் WC-135 விமானத்தினை இவ்வாறு இடைமறித்ததாகவும் அவற்றில் ஒன்று 150 அடி இடைவெளியில் பறந்து இடையூறு செய்ததாகவும் அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கிழக்கு சீன கடற்பகுதிக்கு மேல் கதிர்வீச்சை கண்டறியும் முயற்சியில் குறித்த அமெரிக்க விமானம் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சீன விமானிகள் விமானத்தை இயக்கிய விதம், இரு விமானங்களும் பயணித்த வேகம் ஆகியவற்றைக் கொண்டு பார்க்கும்போது இது தொழில் முறையற்ற இடைமறித்தலாக கருதப்படுவதாக அமெரிக்க விமானப்படையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் கரையோரவளங்கள் நிறைந்த சர்வதேச கடற்பகுதியின் அருகில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் மேலும் மேலும் பதற்றங்களை தோற்றுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg