Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ் மக்களே என்னை வாழ வைத்த தெய்வங்கள்: ரஜினிகாந்த்

In சினிமா
Updated: 12:11 GMT, May 19, 2017 | Published: 10:54 GMT, May 19, 2017 |
0 Comments
1498
This post was written by : Surenth

தமிழ் மக்கள் நல்உள்ளம் கொண்ட, தன்னை வாழ வைக்கும் தெய்வங்கள் எனவும் தெய்வங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று, தான் விரும்புவதாகவும் நடிகர் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக இரசிகர்களைச் சந்தித்து வரும் அவர், இன்று (வெள்ளிக்கிழமை) சென்னையில் ஸ்ரீ இராகவேந்திரா மண்டபத்தில் இரசிகர்களின் மத்தியில் உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தனது 67 வயதை கடந்துள்ள போதிலும் 23ஆண்டுகள் மாத்திரமே கர்நாடகத்தில் இருந்ததாகவும் மீதி உள்ள 44 ஆண்டுகள் தமிழகத்தில் தமிழனாக இருந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தான் கர்நாடகத்தில் இருந்து வந்திருந்தாலும் தன்னை ஆதரித்து அன்பு காட்டியது தமிழ் மக்கள் எனவும் தனக்கு பெயர், புகழ், பணம் எல்லாவற்றையும் அள்ளிக் கொடுத்து தன்னை தமிழ் மக்கள் தமிழனாக மாற்றிவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

மராட்டியனாக தான் இருந்தாலும் தான் பச்சை தமிழன் என்றும் தனது மூதாதையர்கள், பெற்றோர் எல்லாம் கிருஷ்ணகிரியில் பிறந்தவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg