Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மானிய கோரிக்கைகள் தொடர்பில் விவாதம் செய்ய விஷேட சட்டமன்ற கூட்டம்: முதலமைச்சர்

In இந்தியா
Updated: 11:08 GMT, May 19, 2017 | Published: 11:08 GMT, May 19, 2017 |
0 Comments
1277
This post was written by : Surenth

மானிய கோரிக்கைகள் தொடர்பில் விவாதம் செய்வதற்கு விஷேட சட்டமன்ற கூட்டத்தொடர் நடத்த திட்டமிட்டுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். உதகையில் 121ஆவது மலர் கண்காட்சியை ஆரம்பித்து வைத்த பின்னர், உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

121ஆவது மலர் கண்காட்சி மிகச் சிறப்பாக அமைந்துள்ளதாகவும், 3ஆம் நாள் நடைபெறும் கண்காட்சியில் 2 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

மேலும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்த அனைத்துத் திட்டங்களும் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் அதற்கான நடவடிக்கைகளை தான் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நீட் நுழைவுத்தேர்வு தொடர்பான பிரச்சினை நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் அதுகுறித்து தற்போது எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார்.

இந்த நிகழ்வில், உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg