Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இத்தாலி ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறியது சானியா ஜோடி

In டெனிஸ்
Updated: 05:53 GMT, May 20, 2017 | Published: 05:53 GMT, May 20, 2017 |
0 Comments
1200
This post was written by : Risha

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முன்னோட்ட போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில், இத்தாலியின் சாரா எர்ரானி – மார்ட்டினா டிரெவிசான் ஜோடியை வீழ்த்தி இந்தியாவின் சானியா மிர்சா- கசகஸ்தானின் யரோஸ்லாவா ஷிவ்டோவா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

நேற்று இடம்பெற்ற காலிறுதி போட்டியில், சானியா ஜோடி 6-4, 6-1 என்ற செட்கணக்கில் இத்தாலி ஜோடியை வீழ்த்தியது.

இந்நிலையில், அரையிறுதி போட்டியில் சானியா ஜோடி சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் – சீனத்தைபேயின் யங் ஜான் சான் ஜோடியை எதிர்கொள்ளவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg