Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ் மொழி மீதுள்ள பற்றை தமிழக அரசு இல்லாமல் செய்வதற்கு முயற்சிக்கிறது: ஸ்டாலின்

In இந்தியா
Updated: 06:53 GMT, May 20, 2017 | Published: 06:53 GMT, May 20, 2017 |
0 Comments
1289
This post was written by : Surenth

மாணவர்களுக்கு தமிழ் மொழி மீதுள்ள பாசம் மற்றும் பற்றை இல்லாமல் செய்வதற்கு, அ.தி.மு.க. அரசும் முயற்சிப்பது வேதனையளிக்கிறது என, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மொழியை மத்திய ஆட்சி மொழியாக்குவது, மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக மாற்றுவது தொடர்பில், மத்திய அரசு அலட்சியம் இருப்பதற்கு தமிழக அரசு இடம்கொடுத்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

மத்திய அரசு ஹிந்தியை மொழியை, கட்டாய மொழியாக அமுல்படுத்தும் சந்தர்ப்பத்தில், அன்னைத் தமிழ் மொழியை மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது மிக அவசியமாக உள்ளது எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

தமிழ் மொழி பற்றிய சிந்தனையை வருங்கால தலைமுறையிடம் இருந்து முழுவதுமாக மறக்க வைத்துவிட வேண்டும் என்று திட்டமிட்டு மத்திய அரசு செயல்படுவதாக அவர் மேலும் கூறினார்.

அ.தி.மு.க. அரசு செம்மொழிப் பூங்கா மற்றும் செம்மொழி நூலகம் போன்றவற்றை சீர்குலைத்து, தற்போது தமிழ் கற்கும் சட்டத்தையும் சீர்குலைக்கும் நோக்கில் செயல்பட்டுக் கொண்டிருகின்றது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg