Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அழிக்கப்பட்ட தொழில்துறைகளை மீண்டும் கட்டியெழுப்ப நடவடிக்கை: மாவை

In இலங்கை
Updated: 09:34 GMT, May 20, 2017 | Published: 09:34 GMT, May 20, 2017 |
0 Comments
1585
This post was written by : Risha

யாழில் அழிக்கப்பட்டுள்ள தொழில்துறைகளை கட்டியெழுப்புவதற்கான புதிய திட்டங்கள் வகுக்கப்படும் என தமிழரசுக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மக்கள் சேவை வேலைத்திட்டத்தின் கண்டாவளை பிரதேச மக்களுக்கான நடமாடும் சேவை கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றிருந்தது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், யாழ். மாவட்ட அபிருத்தி தொடர்பிலான பிரதமருடனான நேற்றைய சந்திப்பின்போது பலாலி விமான நிலையம் மற்றும் பட்டதாரிகள், பெண்கள், புனர்வாழ்வுபெற்ற இளைஞர்கள் ஆகியோருக்கான வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினோம்.

அதன்படி, யாழில் பல பெண்கள் வேலைவாய்ப்பற்று உள்ள நிலையில், அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் ஆடைத் தொழிற்சாலை போன்றவற்றை நிறுவுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதற்கு பிரதமர் உடன்பாடு தெரிவித்துள்ளார் என்றும் குறிப்பிட்டார்.

உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், இராஜாங்க அமைச்சர் விஜயகலா, நாடாளுமன்ற உறுப்பினர்களான சேனாதிராஜா, சிறிதரன், வட. மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, வட மாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது, கண்டாவளை பிரதேச மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்பட்டதுடன், அரச ஆவணங்கள், மருத்துவம் உள்ளிட்ட சேவைகளை மக்கள் பெற்றுக்கொண்டனர். நாளை பச்சிளைப்பள்ளி பிரதேசத்திற்கான நடமாடும் சேவை பளை மத்திய கல்லூரியில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடதக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg