Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தலவாக்கலையில் அடிப்படை வசதிகளைக் கோரி தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

In இலங்கை
Published: 10:27 GMT, May 20, 2017 |
0 Comments
1313
This post was written by : Ravivarman

சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கு, தோட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனத் தெரிவித்து தலவாக்கலை பேர்ஹாம் தோட்ட தொழிலாளர்கள் நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்றையதினம் (சனிக்கிழமை) மேற்படி ஆர்ப்பாட்டம் பேர்ஹாம் தோட்டத்தின் மூடப்பட்டிருக்கும் தொழிற்சாலைக்கு முன்பாக இடம்பெற்றதில், அத்தோட்டத்தைச் சேர்ந்த சுமார் 200ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அத்தோட்ட நிர்வாகத்தினால் கவனிக்கப்படாத பல்வேறு விடயங்களை, வாசகங்கள் எழுதிய பதாதைகள் ஊடாக வெளிக்கொண்டு வந்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது தோட்டத்தின் தேயிலைத் தொழிற்சாலை மூடப்பட்டிருப்பதால், வேறு தோட்டங்களுக்கு அங்கு பறிக்கப்படுகின்ற தேயிலை கொழுந்து கொண்டு செல்லப்படுவதனால் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் மறுக்கப்பட்டு வருவதாக தொழிலாளர்கள் சுட்டிக்காட்டினர்.

இதேவேளை தோட்டத்தின் தேயிலை மலைகள் பராமரிப்பின்றி காடாகக் காட்சியளிப்பதால், தோட்ட நிர்வாகம் பணிக்கும் தேயிலை இறாத்தலை பெறமுடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், வருமான ரீதியில் தாம் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

அத்துடன், தொழில் ரீதியில் முன்னேற்றமடைய பேர்ஹாம் தோட்ட மலைகளை துப்பரவு செய்து, அட்டைக்கடி மற்றும் காட்டு மிருகங்களின் தொல்லையில் இருந்து தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களைப் பாதுகாக்க வேண்டும் எனவும் வழியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

DSC03753 (1) DSC03701

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg