Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உடன்படிக்கையின்றி வெளியேறினால் கடுமையான விளைவுகள் ஏற்படும்: பிரெக்சிற் பேச்சாளர்

In
Updated: 11:47 GMT, May 20, 2017 | Published: 11:19 GMT, May 20, 2017 |
0 Comments
1339
This post was written by : Elakkiya

வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தாமல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுமாயின் கடுமையான விளைவுகள் ஏற்படும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரெக்சிற் பேச்சாளர் மைக்கேல் பார்னியர் எச்சரித்துள்ளார்.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே மைக்கேல் பார்னியர் மேற்படி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ஐரோப்பிய ஒன்றியத்துடன் எதிர்கால உறவுகளை பிரித்தானியா கட்டியெழுப்ப வேண்டுமாயின் முதலில் நம்பகத்தன்மையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக அமையாதவாறு ஒன்றியத்துடன் ஒரு உடன்பாட்டை பெற்றுக் கொள்ளும் மனநிலையில் பிரித்தானியா இருந்தால் அதனை நான் பாராட்டுகின்றேன்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இரண்டு ஆண்டு பிரெக்சிற் பேச்சுவார்த்தை நிறைவடைந்து எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கு முன்னர் நிறுவனங்கள் மற்றும் மக்களுக்கு சட்டபூர்வமான தெளிவூட்டலை வழங்க வேண்டும் என்றும் மைக்கேல் பார்னியர் வலியுறுத்தியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg