Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சட்டவிரோத கட்டட நிர்மாணங்களுக்கு எதிராக மக்கள் குரலெழுப்ப வேண்டும்: துமிந்த

In இலங்கை
Updated: 11:27 GMT, May 20, 2017 | Published: 11:27 GMT, May 20, 2017 |
0 Comments
1387
This post was written by : Risha

சட்டவிரோத கட்டட நிர்மாணங்களுக்கு எதிராக மக்கள் குரல் எழுப்பி எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என அமைச்சர் துமிந்த திஸாநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெள்ளவத்தை அனர்த்த பகுதியில் இன்று (சனிக்கிழமை) மூன்றாவது நாளாகவும் மீட்பு பணிகள் தொடர்ந்து வருகின்றன. குறித்த பகுதியை நேரில் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்த அமைச்சர், ”இது ஒரு தேசிய ரீதியிலான பிரச்சினை. அனர்த்தமொன்று இடம்பெற்ற பின்னர், அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதை தவிர்த்து ஒருவருக்கொருவரை குற்றம் சாட்டிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.

இந்நிலையில், கொழும்பு நகரிலுள்ள சட்டவிரோத குடியேற்றங்கள் அனைத்தையும் அகற்றுவதற்கான நடவடிக்கைகளை உரிய அதிகாரிகள் முன்னெடுத்து வருகிறது.

இதேவேளை, தாம் வசிக்கும் பிரதேசங்களில் சட்டவிரோத கட்டடங்கள் காணப்படுமாக இருப்பின் அவற்றிற்கு எதிராக மக்கள் குரல் எழுப்பி எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.

மக்கள் ஒன்றுகூடிய இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக போராடும் பட்சத்தில், அவற்றிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, சட்டவிரோத கட்டட நிர்மாணங்களுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடி, குரல் கொடுக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg