Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு: அச்சத்தில் பிரித்தானிய மக்கள்

In
Updated: 11:47 GMT, May 20, 2017 | Published: 11:47 GMT, May 20, 2017 |
0 Comments
1235
This post was written by : Elakkiya

பிரித்தானியாவில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துச் செல்வது மக்களை அச்சமடைய செய்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதாக பிரித்தானியா முடிவெடுத்த நாளிலிருந்தே பிரித்தானியா பொருளாதார ரீதியாக பல மாற்றங்களை சந்தித்து வருகிறது. அதிலும் குறிப்பாக அடிப்படை பொருட்களின் விலைகள் உயர்வடைந்து செல்கின்றது.

இந்த விலை அதிகரிப்பு பிரித்தானிய மக்களை எந்தளவு அச்சமடைய செய்துள்ளது என லண்டனை அடிப்படையாக கொண்டு இயங்கும் சந்தை ஆராய்ச்சி நிறுவனமான மின்டல் ஆய்வு நடத்தியுள்ளது.

மேற்படி ஆய்வின் பிரகாரம், பத்தில் எட்டுபேர் உணவுப் பொருட்களின் விலை உயர்வு தம்மை அச்சமடைய செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதேவேளை பிரெக்சிற் விவகாரம் வாழ்க்கைச் செலவை பாதிப்பதாக 46 சதவீதமானோர் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் வசிக்கும் 83 சதவீத மக்கள் பொதுவாக பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை உயர்வு தங்களை பாதிப்பதாக கூறியுள்ளனர்.

பொருட்களின் விலை உயர்ந்த போதிலும், பெரும்பாலான மக்கள் தங்கள் வருமானம் அடுத்த ஆண்டு இன்னும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்கின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg