Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முஸ்லிம் அரசியல்வாதிகள் காணிகளை சட்டவிரோதமாக கைப்பற்றியுள்ளார்கள்: ஞானசார தேரர்

In இலங்கை
Updated: 13:59 GMT, May 20, 2017 | Published: 13:59 GMT, May 20, 2017 |
0 Comments
1292
This post was written by : Ravivarman

நாடு முழுவதும் தமது மக்கள் வாழும் பிரதேசங்களை விரிவுபடுத்தும் நோக்கில் முஸ்லிம் அரசியல்வாதிகள் பெருமளவான காணிகளை சட்டவிரோதமாக கைப்பற்றியுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றஞ்சுமத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வட.கிழக்கில், முல்லைத்தீவு, மன்னார், ஏறாவூர் பிரதேசங்களில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளுக்கு அருகில் பெருந்தொகையான காணிப்பிரதேசங்களை கையகப்படுத்தியுள்ளதுடன், பெருமளவு பணத்தினைக் கொடுத்து அவற்றினை எதிர்கால நடவடிக்கைகளுக்காக பாதுகாத்து வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இந்த நிலைமை விரைவாக அதிகரித்துள்ளதுடன், இதனை தடுத்து நிறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg