Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெள்ளவத்தை அனர்த்தம்: உரிமையாளருக்கு விளக்கமறியல் (2ஆம் இணைப்பு)

In இலங்கை
Updated: 10:04 GMT, May 21, 2017 | Published: 02:22 GMT, May 21, 2017 |
0 Comments
1913
This post was written by : Ravivarman

வெள்ளவத்தையில் இடிந்து விழுந்த கட்டடத்தின் உரிமையாளரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கல்கிஸை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொலிஸில் சரணடைந்த மேற்படி நபரைக் கைது செய்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) கல்கிஸை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தியபோதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெள்ளவத்தையில் உடைந்து விழுந்த கட்டடத்தின் உரிமையாளர் கைது!

கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தில் உடைந்து விழுந்த மாடிக் கட்டடத்தின் உரிமையாளர் பொலிஸில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளவத்தை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 62 வயது நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை கல்கிஸ்ஸை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளவத்தை, சார்லிமண்ட் ஒழுங்கையில் அமைந்திருந்த ஏழுமாடிக் கட்டடம் கடந்த 18ஆம் திகதி இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்ததுடன், சுமார் 21 பேர்வரை காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg