Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்காவின் உளவாளிகளுக்கு நடந்தது என்ன?

In
Updated: 04:28 GMT, May 21, 2017 | Published: 04:24 GMT, May 21, 2017 |
0 Comments
1697
This post was written by : Sylviya

அமெரிக்க புலனாய்வு அமைப்பின் குறைந்தது 20 இரகசிய உளவாளிகள் சீன அரசாங்கத்தால் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது சிறையிலடைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம், 2010 மற்றும் 2012ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நடைபெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நடவடிக்கையின் காரணமாக இரகசிய தகவல்களை அமெரிக்கா பெறுவது முடக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அமெரிக்கா வெளியிட்ட தகவல்களின் படி, அமெரிக்க புலனாய்வு அமைப்பின் இணையத்தளம் ஊடுருவப்பட்டதா அல்லது குறித்த அமைப்பின் உள்ளேயே சீன அரசாங்கத்திற்கு துணை சென்றவர்கள் எவரேனும் இருந்தனரா என்பது இதுவரை கண்டறியப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேற்குறித்த அமெரிக்க இரகசிய உளவாளிகளுக்கு நிகழ்ந்தது என்ன என்பது தொடர்பில் தற்போது தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விசாரணைக்கு ஹனி பாஜர் (Honey Badger) எனும் விலங்கினத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg