Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மன்னார் கிளை தலைவர் தெரிவு

In இலங்கை
Updated: 04:42 GMT, May 21, 2017 | Published: 04:42 GMT, May 21, 2017 |
0 Comments
1342
This post was written by : Varshini

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மன்னார் கிளையின் தலைவராக, சங்கத்தின் முன்னாள் தலைவரான ஜே.ஜே.கெனடி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளையின் வருடாந்த பொது சபைக்கூட்டமும், புதிய நிர்வாக சபை தெரிவும் நேற்று (சனிக்கிழமை) மன்னார் – தாழ்வுபாடு பிரதான வீதியில் உள்ள மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.

இதன்போது இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் புதிய தலைவராக ஜே.ஜே.கெனடி போட்டியின்றி தெரிவானதுடன், உப தலைவராக ரெஜி ஜெயபாலனும், செயலாளராக கே.ரகு சங்கரும், பொருளாளராக அன்ரன் நிமாலும் போட்டியின்றி தெரிவாகினர்.

மேலும் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மன்னார் கிளையின் புதிய நிர்வாகசபை உறுப்பினர்களாக பி.மிதுனன், அருட்தந்தை லக்ஸன் டி சில்வா, கே.கந்தசாமி, ஏ.சி.முஹமட் பசில், பாஸ்டர் பத்திநாதன், ஊடகவியலாளர் பீ.ஏ.அந்தோனி மார்க் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

இந்நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

red cross (1) red cross (2) red cross (3) red cross (4)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg