Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தலைமுறைகளுக்கு இடையில் வன்முறையை தூண்டுகிறார் மே: ஜெரமி கோர்பின்

In
Updated: 07:46 GMT, May 21, 2017 | Published: 07:25 GMT, May 21, 2017 |
0 Comments
1575
This post was written by : Sylviya

பிரித்தானிய தலைமுறைகளுக்கு இடையில் பிரதமர் தெரேசா மே வன்முறையை தூண்டிவிடுகின்றார் என தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார்.

வயது வந்தவர்களுக்கு எதிராக இளவயதினரை தூண்டிவிடுவதன் மூலம் தெரேசா மே வன்முறையை தூண்டி விடுகின்றார் என கோர்பின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிரித்தானிய பொதுத் தேர்தல் குறித்து பர்மிங்ஹாமில் நேற்று (சனிக்கிழமை) நடத்தப்பட்ட பிரசார நடவடிக்கையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் உரையாற்றிய அவர், “கொன்சர்வேற்றிவ் கட்சியினர் பெரியவர்களுக்கு எதிராக இளவயதினரை தூண்டுகின்றனர். இரு தரப்பினருக்கும் இடையில் பிரிவை ஏற்படுத்துவதிலேயே கொன்சர்வேற்றிவ் மும்முரம் காட்டுகின்றது. எனினும், அனைவரையும் ஒன்றிணைப்பதிலேயே தொழிற்கட்சியின் முழுக் கவனமும் உள்ளது” என தெரிவித்துள்ளார்.

அத்துடன், இளவயதினரும் பாதிப்படையும் வகையிலேயே கொன்சர்வேற்றிவ் கட்சியின் திட்டங்கள் உள்ளன என தெரிவித்த அவர், மாணவர்களின் கல்விக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg