Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பச்சிலைப்பள்ளியில் இடம்பெற்ற ஜனாதிபதி நடமாடும் சேவை

In இலங்கை
Published: 09:42 GMT, May 21, 2017 |
0 Comments
1774
This post was written by : Varshini

கிளிநொச்சி – பச்சிளைப்பள்ளி பிரதேச மக்களுக்கான ஜனாதிபதி நடமாடும் சேவை இரண்டாவது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்று வருகின்றது.

பளை மத்திய கல்லூரியில் இடம்பெற்றுவரும் குறித்த நடமாடும் சேவையினை உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் தவநாதன், அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இன்றைய நடமாடும் சேவையில் இரு தம்பதியினருக்கு பிந்திய திருமண பதிவு இடம்பெற்றதோடு, அவர்களுக்கான சாட்சி பத்திரத்தில் அமைச்சர் வஜிர ஆபேவர்தனவும், இராஜாங்க அமைச்ச விஜயகலா மகேஸ்வரனும் கையொப்பமிட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, குறித்த பிரதேசத்தில் உள்ள மக்களுக்கான அரச ஆவணங்களை பெற்றுக்கொள்ளல், சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்டவற்றிற்கான நடமாடும் சேவை தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது.

pachilaippalli (3) pachilaippalli (5) pachilaippalli (6) pachilaippalli (7) pachilaippalli (8) pachilaippalli (9) pachilaippalli (10) pachilaippalli (11) pachilaippalli (12) pachilaippalli (13) pachilaippalli (14) pachilaippalli (15) pachilaippalli (16) pachilaippalli (17) pachilaippalli (18) pachilaippalli (1)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg