Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகற்காய் பொரித்த கறி

In
Updated: 12:13 GMT, May 21, 2017 | Published: 12:12 GMT, May 21, 2017 |
0 Comments
1413
This post was written by : Shailu

தேவையான பொருட்கள்

பாகற்காய் – 1 கப் (வட்டமாக வெட்டிய துண்டுகள்)
எண்ணெய் – 1/4கப்
பச்சை மிளகாய் – 2
வெங்காயம் – 1 (நறுக்கியது)
மஞ்சள்தூள் – ½தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – ½ தேக்கரண்டி
தேங்காய்ப்பால் – 1/2கப்
சீனி – ½தேக்கரண்டி
தக்காளி – 1 (நறுக்கியது)
கருவேப்பிலை
உப்பு

செய்முறை

பாகற்காய்யை வட்டமாக வெட்டி உப்பு கலந்த தண்ணீரில் போட்டு வைக்கவும். பின் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாகியதும் தண்ணீரில் போட்டு வைத்த பாகற்காய்களை போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுத்து வைக்கவும்.

பிறகு மற்றுமொரு பாத்திரத்ததை எடுத்து சிறிதளவு எண்ணெய் விட்டு கருவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய், எல்லாம் நன்றாக வதங்கியதும், அதனுள் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பொரித்து வைத்த பாகற்காய், தக்காளி, சீனி, தேங்காய்ப்பால், உப்பு ஆகிய அனைத்தும் சேர்த்து நன்றாக கிளறி பதத்தில் இறக்கி பரிமாறவும். தற்போது பாகற்காய் பொரித்த கறி தயார்..!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg