Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெள்ளவத்தை அனர்த்தம்: விசாரணை அறிக்கை நாளை

In இலங்கை
Published: 14:04 GMT, May 21, 2017 |
0 Comments
1226
This post was written by : Vithushagan
625.0.560.350.160.300.053.800.668.160.90

கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் நாளை (திங்கட்கிழமை) சமர்ப்பிக்கப்படவுள்ளது.

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சிக்கு சொந்தமான மூன்று நிறுவனங்கள் மேற்கொண்ட விசாரணை அறிக்கை நாளை சமர்பிக்கப்படவுள்ளதாக அந்த அமைச்சின் செயலாளர் டப்ளியூ.கே.கே.அதுகோரல தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் ஐந்து மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்ததுடன், 21 பேர் வரையில் காயமடைந்திருந்தனர்.

இந்நிலையில், குறித்த கட்டிடத்தின் உரிமையாளர் இன்று கைது செய்யப்பட்ட நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg