Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இங்கிலாந்து அணியை குறைத்து எடைபோடக் கூடாது: டி வில்லியர்ஸ்

In கிாிக்கட்
Updated: 04:57 GMT, May 22, 2017 | Published: 04:57 GMT, May 22, 2017 |
0 Comments
1431
This post was written by : Shailu

சம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்து அணியை குறைத்து எடைபோடக் கூடாது என தென் ஆப்பிரிக்கா அணியின் தலைவர் டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 8 அணிகளுக்கு இடையிலான சம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஜூன் 1ஆம் திகதி முதல் 18ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்த தொடருக்கு தயாராகும் வகையில் தென்ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்துடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நாளைய மறுதினம் (புதன்கிழமை)  விளையாடவுள்ள நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டி வில்லியர்ஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ”சம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் கிண்ணத்தை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படும் அணிகளில் இங்கிலாந்தும் உள்ளடங்கும். எனவே இங்கிலாந்து அணியை குறைத்து எடை போடக் கூடாது.

சம்பியன்ஸ் டிராபிக்கு முன்னோட்டமாக நடத்தப்படும் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றுவது எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

நாங்களும் அவுஸ்ரேலியா மற்றும் இலங்கை போன்ற அணிகளை வையிட் வோஷ் செய்து வலுவாக காணப்படுகின்றோம். சொந்த நாட்டில் இங்கிலாந்து அணியாகது வெற்றிகளை குவித்து வருகிற நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வெல்ல விரும்புகிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg