Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் இறுதிப் போட்டி: உக்ரைன் வீராங்கனை வெற்றி

In விளையாட்டு
Updated: 08:48 GMT, May 22, 2017 | Published: 07:22 GMT, May 22, 2017 |
0 Comments
1330
This post was written by : Shailu

இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் இறுதிப் போட்டியில் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா வெற்றி பெற்றுள்ளார்.

இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் இடம்பெற்று வருகின்றது. இதில் பெண்கள் பிரிவின் இறுதி போட்டியில் 4ஆம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலெப்பும் தரவரிசையில் 11-வது இடத்திலுள்ள உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினாவும் மோதினர்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை பறிகொடுத்த ஸ்விடோலினா, போட்டியின் முடிவில் 4-6, 7-5, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றினார்.

இந்த ஆண்டில் அவர் பெற்ற 4-வது பட்டம் இதுவாகும். இதன் மூலம் இன்று (திங்கட்கிழமை) வெளியாகும் புதிய தரவரிசையில் அவர் முதல் 10 இடத்திற்குள் நுழையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg