Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஏ.கே.பி கட்சியின் தலைவராக ஜனாதிபதி தையீப் எர்டோகன் மீண்டும் தெரிவு

In ஐரோப்பா
Updated: 07:59 GMT, May 22, 2017 | Published: 07:59 GMT, May 22, 2017 |
0 Comments
1401
This post was written by : Sylviya

துருக்கியின் ஏ.கே.பி கட்சியின் தலைவராக ஜனாதிபதி தையீப் எர்டோகன் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஏ.கே.பி கட்சியின் சிறப்பு மாநாடு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) துருக்கித் தலைநகர் அங்காராவில் நடத்தப்பட்ட போதே அவர் குறித்த கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எர்டோகனுக்கு ஏ.கே.பி கட்சியைச் சேர்ந்த சுமார் 1,414 பேர் ஆதரவளித்து வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் உரையாற்றிய எர்டோகன், “சுமார் 998 நாட்கள் பிரிந்திருந்ததைத் தொடர்ந்து இன்று நாம் மீண்டும் இணைந்துள்ளோம். எமது இலக்கை அடையும் பொருட்டு நாம் இணைந்து செயற்பட வேண்டும்” என தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் உரையாற்றிய அவர், பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் புதிய திட்டங்கள் ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஐரோப்பிய ஒன்றியம் துருக்கியை மதிக்காத பட்சத்தில் குடியேற்றவாசிகளை உள்வாங்குதல் மற்றும் துருக்கியர்களுக்கான வீசா அற்ற பயணம் ஆகியன தொடர்பில் துருக்கி மௌனம் சாதிக்காது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg