Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென் ஆபிரிக்காவிற்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்தியா அபார வெற்றி

In கிாிக்கட்
Updated: 08:47 GMT, May 22, 2017 | Published: 07:41 GMT, May 22, 2017 |
0 Comments
1535
This post was written by : Shailu

தென் ஆபிரிக்காவிற்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

இந்தியா, தென்ஆப்பிரிக்கா, அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே ஆகிய 4 நாடுகள் இடையிலான பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் தென்ஆப்பிரிக்காவில் இடம்பெற்று வந்தது.

இதில் தலா 5 வெற்றிகளுடன் முதல் இரு இடங்களை பிடித்த இந்தியாவும், தென்ஆப்பிரிக்காவும் இறுதிப்போட்டியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) களமிறங்கின.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்ஆப்பிரிக்க அணி இந்திய அணியின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 40.2 ஓவர்களில் 156 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய தரப்பில் ஜூலன் கோஸ்வாமி, பூனம் யாதவ் தலா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

157 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 33 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 160 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை தன் வசப்படுத்தியது.

இந்திய அணி தலைவி மிதாலி ராஜ் 62 ஓட்டங்களுடனும், பூனம் ரவுத் 70 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். தலைவி மிதாலி ராஜுக்கு இது 100-வது போட்டியாக அமைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg