Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதியுடனான சந்திப்பை கோரியுள்ள முஸ்லிம் அமைச்சர்கள்

In இலங்கை
Updated: 08:15 GMT, May 22, 2017 | Published: 08:15 GMT, May 22, 2017 |
0 Comments
1202
This post was written by : Varshini

நாட்டில் அண்மைக் காலமாக தலைதூக்கியுள்ள இனவாத செயற்பாடுகளை தீர்வைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், முஸ்லிம் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளனர்.

இவ்வார இறுதியில் இச் சந்திப்பு இடம்பெறுமென எதிர்பார்ப்பதாகவும், இச் சந்திப்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்டோரும் பங்கேற்கவுள்ளதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அண்மைக் காலமாக முன்னெடுக்கப்பட்ட இன மற்றும் மத விரோத செயற்பாடுகளுக்கு இதுவரை அரசாங்கத்தால் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லையென்றும் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.

நாட்டின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அண்மைக் காலமாக மேற்கொள்ளப்படும் இனவாத செயற்பாடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், முஸ்லிம் அமைச்சர்களும் நாடாளுன்ற உறுப்பினர்களும் தனித்து செயற்படும் நிலை ஏற்படும் என ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg