Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திருமலை அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற குடியரசு தின நிகழ்வு

In இலங்கை
Updated: 08:45 GMT, May 22, 2017 | Published: 08:45 GMT, May 22, 2017 |
0 Comments
1254
This post was written by : Ravivarman

இலங்கை ஜனநயாக சோசலிச குடியரசின் குடியரசு தின நிகழ்வு திருகோணமலை அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தலைமையில் இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் குடியரசு தின நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதன்போது உரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் உரையாற்றுகையில் ,

“இன மத வேறுபாடுகளை விடுத்து நாட்டை முன்னிலைப்படுத்தி இலங்கையர் என்ற அடிப்படையில் அனைவரும் செயற்படும் போது நாடு சகல துறைகளிலும் முன்னேற்றமடையும். சுதந்திரத்திற்கு முன்னர் எமது தலைவர்கள் இலங்கையர் என்ற அடிப்படையில் இணைந்து செயற்பட்டார்கள்.

உண்மையான சுதந்திரம் 1972ம் ஆண்டிலேதான் எமது தாய் நாட்டுக்கு கிடைத்தது. அதற்கு பின்னர் சமூக பொருளாதார கலாசார ரீதியாக எமது நாடு அபிவிருத்தி அடைந்த விதத்தை கண்டு நாம் திருப்தி கொள்ள முடியாது. அரச அதிகாரிகளாகிய நாம் அனைவரும் தத்தம் கடமைகள் மற்றும் பொறுப்புக்களை செவ்வனே நிறைவேற்றும் போது உரிய இலக்கை நாடு அடையும்” என அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.அருள்ராசா, மாவட்ட உதவி அரசாங்க அதிபர் என்.பிரதீபன் உள்ளிட்ட மாவட்ட செயலக அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள்  எனப் பலர் கலந்து கொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg