Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேர்தலின் பின் பிரெக்சிற்றுக்கு அதிக நேரம் செலவிட முடியாது: தெரேசா மே

In
Updated: 09:12 GMT, May 22, 2017 | Published: 09:01 GMT, May 22, 2017 |
0 Comments
1536
This post was written by : Sylviya

பொதுத் தேர்தலின் பின்னர், பிரெக்சிற் தொடர்பான உடன்படிக்கை குறித்து அதிக நேரம் செலவிட முடியாது என பிரித்தானிய பிரதமர் தெரேசா மே குறிப்பிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (திங்கட்கிழமை) வேல்ஸில் நடத்தப்படவுள்ள பொதுத் தேர்தல் பிரசார நடவடிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இன்று வேல்ஸ் கொன்சர்வேற்றிவ் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனமும் வெளியிடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்போது பிரெக்சிற் தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது யார்?  தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பினா அல்லது தெரேசா மேயா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் என மே தெரிவிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதிக்கு பின்னர் சுமார் 11 நாட்கள் கழித்து பிரெக்சிற் குறித்த பேச்சுவார்த்தையை ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பித்தால் அது சிறப்பாக இருக்கும் என மே குறிப்பிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg