Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சமந்தா – நாக சைதன்யாவின் திருமணம் விரைவில்

In சினிமா
Published: 09:15 GMT, May 22, 2017 |
0 Comments
1215
This post was written by : Vithushagan
201705221420489443_Naga-Chaithanya--Samantha-Marriage-date-Fixed_SECVPF

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகிகளுள் ஒருவராக வலம் வரும் சமந்தாவுக்கும், தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நாக சைதன்யாவுக்கும் எதிவரும் ஒக்டோபர் மாதம் திருமணம் நடைபெற இருக்கிறது.

`விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சமந்தா. அந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த சமந்தா, அந்த படத்தின் தெலுங்கு பதிப்பான `யே மாயா சேசவா’ படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

 அதைத் தொடர்ந்து பல படங்களில் தொடர்ந்து நடித்துள்ள சமந்தா தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். நாக சைதன்யாவுடன் இணைந்து 4 படங்களில் நடித்துள்ள இவர் – நாக தைன்யா. `மனம்’ படத்தில் நடிக்கும் போது காதல் வலையில் விழுந்தனர். அதைத் தொடர்ந்து இருவீட்டாரின் சம்மதம் கிடைக்கவே நாகசைதன்யா – சமந்தா நிச்சயதார்த்தம் கடந்த ஜனவரி மாத இறுதியில் நடந்தது.

சமந்தா தற்போது விஜய்யின் 61ஆவது படம், ‘இரும்புத்திரை’, ‘சாவித்ரி’,  2 தெலுங்கு படங்கள் என்று  நடித்து இருக்கிறார். சிவகார்த்திகேயனுடன் நடிக்க இருக்கும் படத்துக்காக சிலம்பம் கற்று வருகிறார். அதேபோல் நாகசைதன்யாவும் சில படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படங்களை முடித்த பிறகு இருவருக்கும் திருமணம் என்று நடைபெறும் என்று கூறப்பட்டு வந்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg