Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேவை ஏற்பட்டால் பொலிஸார் ஆயுதங்களை பயன்படுத்தலாம்: புதுச்சேரி முதலமைச்சர்

In இந்தியா
Updated: 11:27 GMT, May 22, 2017 | Published: 09:56 GMT, May 22, 2017 |
0 Comments
1678
This post was written by : Surenth
Narayanasamy

குழப்பம் ஏற்படுத்துபவர்களை கட்டுப்படுத்த தேவை ஏற்பட்டால் சட்டத்திற்கு உட்பட்டு பொலிஸார் ஆயுதங்களை பயன்படுத்தலாம் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து இடம்பெற்று வரும் கொலைகள் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பொலிஸ் துறையில் உள்ள சிலர் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாகவும், அவர்களை பணியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனறும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொது மக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டியது பொலிஸாரின் கடமை என்றும், அதனை அவர்கள் உணர்ந்து சேவை செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg