Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

துருக்கி இராணுவ சதிப்புரட்சியுடன் தொடர்புடையவர்கள் மீது விசாரணை

In ஐரோப்பா
Updated: 11:32 GMT, May 22, 2017 | Published: 11:26 GMT, May 22, 2017 |
0 Comments
1445
This post was written by : Sylviya

துருக்கி  இராணுவ சதிப்புரட்சியுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 200க்கும் மேற்பட்டோர் இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களுள் உயர்மட்ட வீரர்கள் மற்றும் துருக்கி விமானப்படையின் முன்னாள் தலைவர் போன்றோரும் உள்ளடங்குவர். கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இராணுவ சதிப்புரட்சியினால் கடந்த வருடம் ஏற்பட்ட வன்முறையின் போது சுமார் 240பேர் கொல்லப்பட்டனர். இந்த சதிப்புரட்சிக்கு அமெரிக்காவை தளமாகக் கொண்டு செயற்படும் மதகுரு பெத்துல்லா குலெனே காரணம் என துருக்கி குற்றஞ்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg