Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முகத்தை பளபளப்பாக்க வேண்டுமா?

In
Updated: 11:52 GMT, May 22, 2017 | Published: 11:37 GMT, May 22, 2017 |
0 Comments
1283
This post was written by : Shailu
facial

அழகாக ஜொலிக்க வேண்டும் என விரும்பாத பெண்களே கிடையாது. அழகு நிலையங்களுக்கு வீணாக பணத்தை செலவு செய்யாமல் வீட்டிலேயே முகத்தை  பளபளப்பாக வைத்துக்கொள்ள சில குறிப்புக்கள்…

சருமத்தில் ஏற்படும் கருமையை போக்க: பார்லியை தூளாக்கி, அத்துடன் சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறு, பால் ஆகியவற்றை கலக்க வேண்டும். பின் அந்த கலவையை, வெயில் அதிகமாகப்படும் இடங்களான முகம், கழுத்து, கை, கால் ஆகிய இடங்களில் பூசவேண்டும். சிறிது நேரம் கழித்து, அவை காய்ந்ததும், குளிர்ந்த நீரால் கழுவிவிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர சருமத்தில் ஏற்படும் கருமை மறைந்து போய்விடும்.

எண்ணெய் சருமத்திற்கான பேஸ் மாஸ்க்: மூன்று டீஸ்பூன் முல்தானிமட்டி, ஒரு டீஸ்பூன் தயிர், அரை தக்காளி, ஐந்து துளி ஆரஞ்சு எசன்ஷியல் ஒயில் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்த பின் முகத்தை கழுவ, எண்ணெய் பசை நீங்கி, முகம் பளபளக்கும்.

இந்த மாஸ்க் சாதாரண மற்றும் எண்ணெய் பசை சருமத்திற்கு உகந்தது. இந்த மாஸ்க்கை முகத்தில் பூசுவதால், அவை காய்ந்து இறுகி வறண்ட தன்மையை கொடுக்கும். இந்த தன்மை சருமத்தில் காணப்படும் அதிகப்படியான எண்ணெய் பசையை உறிஞ்சுவதோடு, அழுக்கையும் அகற்றுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg