Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிளிநொச்சியிலும் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது

In இலங்கை
Updated: 12:09 GMT, May 22, 2017 | Published: 12:08 GMT, May 22, 2017 |
0 Comments
1343
This post was written by : Varshini

இலங்கையின் 45ஆவது குடியரசு தின நிகழ்வுகள் இன்று (திங்கட்கிழமை) கிளிநொச்சியிலும் நடைபெற்றன.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில், அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இந் நிகழ்வுகள் இடம்பெற்றன.

தேசிய கொடி ஏற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில், இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த வரலாறு உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கி அரசாங்க அதிபர் தலைமை உரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து கிளிநொச்சி உதவித் திட்ட பணிப்பாளர் கேதீஸ்வரன் சிறப்புரை நிகழ்த்தினார்

இந்நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்துகொண்டிருந்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg