Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மஞ்செஸ்டர் தற்கொலை குண்டுதாரி 22 வயதான சல்மான் அபடி (3ஆம் இணைப்பு)

In
Updated: 16:56 GMT, May 23, 2017 | Published: 02:48 GMT, May 23, 2017 |
0 Comments
2194
This post was written by : Vithushagan

மஞ்செஸ்டரில் தற்கொலைத் தாக்குதலை நடத்தியவர் 22 வயதான சல்மான் அபடி என தெரியவருகிறது. அமெரிக்க அதிகாரிகள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளனர். 1994 இல் மஞ்செஸ்டர் நகரில் பிறந்த சல்மான் அபடியின் பெற்றோர் லிபியாவில் இருந்து அகதிகளாக பிரித்தானியாவுக்கு வந்தவர்களெனவும் தெரிவிக்கப்படுகிறது

மன்செஸ்டர் தாக்குதல்: சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது  (2ஆம் இணைப்பு)

பிரித்தானியாவின் மன்செஸ்டர் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 23 வயது மதிக்கத்தக்க ஒருவர் பொலிஸாரால் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் தெற்கு மன்செஸ்டரில் உள்ள சோல்ட்டன் (Chorlton) பகுதியில் வசித்து வருபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் நேற்று (திங்கட்கிழமை) இரவு உள்ளூர் நேரப்படி 10.33 மணியளவில் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் இதுவரை 22பேர் உயிரிழந்துள்ளதுடன், குறைந்தது 59பேர் காயமடைந்துள்ளதாக அண்மைய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலை நடத்தியவர் சம்பவத்தின் போது உயிரிழந்ததாகவும் அவர் தன்னிச்சையாகவே குறித்த தாக்குதலை நடத்தியுள்ளார் எனவும் முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. குறித்த தாக்குதலுக்கு வீட்டில் உருவாக்கப்பட்ட குண்டு ஒன்றே பயன்படுத்தப்பட்டுள்ளது என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் உயிரிழந்த பலர் இன்னும் இனங்காணப்படாத நிலையில், 18 வயது நிரம்பிய ஜோர்ஜினா (Georgina Callander) எனும் பெண் இனங்காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் குண்டுத் தாக்குதல்: 22 பேர் உயிரிழப்பு, 59க்கும் அதிகமானோர் காயம் 


பிரித்தானியாவில் உள்ள மன்செஸ்டர் அரீனா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 22 பேர் உயிரிழந்ததுடன் சுமார் 59 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மைதானத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றின் போது இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது. இது ஒரு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் எனவும் கூறப்படுகின்றது.

இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து மன்செஸ்டர்  விக்டோரியா ரயில் நிலையம் மூடப்பட்டுள்ளதாகவும், அதனூடாகச் செல்லும் சகல ரயில் பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இப்பிரதேசத்திலிருந்து விலகி இருக்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

man1 man2 man3 man4 man5 man6 man7 man8 man9 man10 man11

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg