Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெல்லி மேல்சபை நாடாளுமன்ற உறுப்பினருக்கான தேர்தல் இரத்து

In இந்தியா
Updated: 04:51 GMT, May 23, 2017 | Published: 04:15 GMT, May 23, 2017 |
0 Comments
1267
This post was written by : Shailu

டெல்லி மேல்சபை நாடாளுமன்ற உறுப்பினருக்கான தேர்தல் இரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது. அத்தோடு புதிய தேர்தல் திகதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் பணிகள் மற்றும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் போன்ற காரணங்களால் டெல்லி மேல்சபை தேர்தல் இரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையக செய்தித்தொடர்பாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி மேல்சபையில், மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, காங்கிரஸ் நிர்வாகிகள் அகமது பட்டேல், சாந்தாராம் நாயக் உள்ளிட்ட 10 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம், எதிர்வரும் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் நிறைவடைகின்றது.

எனவே, இதற்கான வெற்றிடங்களை நிரப்ப எதிர்வரும் ஜூன் 8-ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையகம் அறிவித்ததோடு, இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பமாவதாக இருந்த நிலையில், தேர்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg